Saturday, December 29, 2012

108 Shirdi Sai Slogans in Tamil

Shirdi Sai Slogans in Tamil

(சீரடி ஓம் சாய்பாபா 108  போற்றிகள்)

1    ஓம்    சாய்நாதா    போற்றி ஓம்

2    ஓம்    தட்சிணாமூர்த்தி தத்த அவதாரா    போற்றி ஓம்

3    ஓம்    சாகர சாயியே    போற்றி ஓம்

4    ஓம்    பண்டரிபுர விட்டலே    போற்றி ஓம்

5    ஓம்    வேங்கட ஸ்மரணா    போற்றி ஓம்

6    ஓம்    கிருஷ்ணா ராம சிவா மாருதி ரூபா    போற்றி ஓம்

7    ஓம்    இறைவன் ஒருவனே என்பாய்    போற்றி ஓம்

8    ஓம்    பிறவி பிணி தீர்ப்பாய்    போற்றி ஓம்

9    ஓம்    மதங்களை கடந்த மகானே    போற்றி ஓம்

10    ஓம்    நாக சாயியே    போற்றி ஓம்

11    ஓம்    வேண்டுவோர் துயர் தீர்க்கும் யோகியே    போற்றி ஓம்

12    ஓம்    சீரடி வாசா சித்தேஸ்வரா    போற்றி ஓம்

13    ஓம்    அற்புதங்கள் செய்யும் ஆண்டவா    போற்றி ஓம்

14    ஓம்    முக்திக்கு வழி காட்டும் முனிவா    போற்றி ஓம்

15    ஓம்    உள்ளத்தின் உள்ளே உறைபவரே    போற்றி ஓம்

16    ஓம்    ஆனந்தமயமானவரே    போற்றி ஓம்

17    ஓம்    சரண் அடைதோரை காப்பவரே    போற்றி ஓம்

18    ஓம்    யாமிருக்க பயமேன் என்பவரே    போற்றி ஓம்

19    ஓம்    விஷ்னு நாம பாராயண பிரியரே    போற்றி ஓம்

20    ஓம்    சித்திரத்தில் உயிருடன் பேசும் தெய்வமே    போற்றி ஓம்

21    ஓம்    மாயையை விரட்டுபவரே    போற்றி ஓம்

22    ஓம்    கண் திருஷ்டி பில்லி சூன்யம் தீர்ப்பவரே    போற்றி ஓம்

23    ஓம்    பிரம்ம ஞானம் அளிப்பவரே    போற்றி ஓம்

24    ஓம்    குருவார தேவா    போற்றி ஓம்

25    ஓம்    சம்சார பயங்களை போக்குபவரே    போற்றி ஓம்

26    ஓம்    துனியின் உதியே மருந்தென்பாய்    போற்றி ஓம்

27    ஓம்    பிராத்தினைக்கு  இளகுவாய்    போற்றி ஓம்

28    ஓம்    எளிமை வடிவானாய்    போற்றி ஓம்

29    ஓம்    சகல லோக சஞ்சாரியே    போற்றி ஓம்

30    ஓம்    முக்காலமும் உணர்ந்தவரே    போற்றி ஓம்

31    ஓம்    மும்மூர்த்தியின் திருஉருவே    போற்றி ஓம்

32    ஓம்    சகல ஜீவன்களிலும் இருப்பாய்    போற்றி ஓம்

33    ஓம்    மூன்றாம் பிறையில் காட்சி தருவாய்    போற்றி ஓம்

34    ஓம்    முந்தைய வினைகளை அறுப்பவரே    போற்றி ஓம்

35    ஓம்    ஓம்சாய்ராம் மந்திரத்தின் சக்தியே    போற்றி ஓம்

36    ஓம்    மதவேறுபாடுகளை களைந்தாய்    போற்றி ஓம்

37    ஓம்    உண்மை அன்புக்கு மகிழ்பவரே    போற்றி ஓம்

38    ஓம்    அன்ன பாபாவே    போற்றி ஓம்

39    ஓம்    இல்லறமும் நல்லறமே என்றாய்    போற்றி ஓம்

40    ஓம்    இளமையிலே துறவியானாய்    போற்றி ஓம்

41    ஓம்    உலகெல்லாம் உன் நாமமே    போற்றி ஓம்

42    ஓம்    தட்சினண பிரியரே    போற்றி ஓம்

43    ஓம்    திக்கெட்டும் நீயே    போற்றி ஓம்

44    ஓம்    திக்கற்றோர்க்கும் நீயே    போற்றி ஓம்

45    ஓம்    சத்சரித சப்தாஹத்தில் அருள்வாய்    போற்றி ஓம்

46    ஓம்    தனதான்யம் அளிப்பாய்    போற்றி ஓம்

47    ஓம்    சிந்தையிலே விந்தை செய்வாய்    போற்றி ஓம்

48    ஓம்    கனவிலும் காட்சி அளித்தாய்    போற்றி ஓம்

49    ஓம்    நினைவிலும் காட்சி அளிப்பாய்    போற்றி ஓம்

50    ஓம்    நீர் ஊற்றி விளக்கேற்றினாய்    போற்றி ஓம்

51    ஓம்    துவாரகாமயி தெய்வமே    போற்றி ஓம்

52    ஓம்    சாவடியில் சயனிக்கும் சத்குருவே    போற்றி ஓம்

53    ஓம்    மகான்களின் தந்தையே    போற்றி ஓம்

54    ஓம்    ஆனந்த நிலையை அருள்வாய்    போற்றி ஓம்

55    ஓம்    நம்பிக்கை பொறுமை காணிக்கையாய் கேட்பாய்    போற்றி ஓம்

56    ஓம்    வெங்குசாவின் ​சீடரே    போற்றி ஓம்

57    ஓம்    பலருக்கும் படியளக்கும் பகவானே    போற்றி ஓம்

58    ஓம்    வாக்கு பலிதம் தந்திடும் சரஸ்வதியே    போற்றி ஓம்

59    ஓம்    வாழ்வாங்கு வாழ வாழ்த்திடுவாய்    போற்றி ஓம்

60    ஓம்    உனை மறவா வரம் தருவாய்    போற்றி ஓம்

61    ஓம்    கலங்குவோர் மனம் களிக்கச்செய்பவரே    போற்றி ஓம்

62    ஓம்    குழந்தை வரம் அருளும் குருவே    போற்றி ஓம்

63    ஓம்    அன்னையாய் தந்தையாய் ஆதரிக்கும் அருளே    போற்றி ஓம்

64    ஓம்    உங்கள் காலடியே எங்கள் சீரடியாம்    போற்றி ஓம்

65    ஓம்    இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழவைப்பாய்    போற்றி ஓம்

66    ஓம்    காம குரோத மதமாச்சர்யம் தீர்ப்பாய்    போற்றி ஓம்

67    ஓம்    காசி பிரயாகையை கால்விரலில் காட்டியவரே    போற்றி ஓம்

68    ஓம்    தீபங்களை ஏற்றி பாவங்களை போக்கினாய்    போற்றி ஓம்

69    ஓம்    தினம்தினம் தியானிப்பவர்களுக்கு சாய்லட்சுமி ரூபமானாய்    போற்றி ஓம்

70    ஓம்    சீரடியே பண்டரிபுரம் என்றாய்    போற்றி ஓம்

71    ஓம்    அன்பால் உலகமுழுவதும் ஒற்றுமை ஆக்கினாய்    போற்றி ஓம்

72    ஓம்    ஐந்து பிராணங்களை ஜோதியாய் ஏற்றவைத்தாய்    போற்றி ஓம்

73    ஓம்    ஆரத்தி எடுப்பவரின் ஆராத்துயர் தீர்ப்பாய்    போற்றி ஓம்

74    ஓம்    அருளாசியை பிரசாதமாய் அளிப்பாய்    போற்றி ஓம்

75    ஓம்    சுமைகளை ஏற்று பகைமையை போக்குவாய்    போற்றி ஓம்

76    ஓம்    கண்ணொளி தந்து காதொலி கேட்கசெய்வாய்    போற்றி ஓம்

77    ஓம்    சரணம் அடைவோர்க்கு கமலபாதம் காட்டுவாய்    போற்றி ஓம்

78    ஓம்    காலை ஆரத்தியில் கருணாமூர்த்தி காட்சி ஆவாய்    போற்றி ஓம்

79    ஓம்    நிலையான ஞானம் நிலைக்கச்செய்வாய்    போற்றி ஓம்

80    ஓம்    சியாமா தாஸ்கனு மகல்சா தாத்யா சத்குருவே    போற்றி ஓம்

81    ஓம்    அல்லா இயேசு அன்னை அனைத்தும் ஆனாய்    போற்றி ஓம்

82    ஓம்    பக்திக்கேற்ற பலனளிப்பாய்    போற்றி ஓம்

83    ஓம்    மனத்திற்கேற்ப வாழ்க்கை துணைநலம் அளிப்பாய்    போற்றி ஓம்

84    ஓம்    எப்பிறவியிலும் உன்னை ஏற்க வைப்பாய்    போற்றி ஓம்

85    ஓம்    யாகம் யோகம் ஏதுமின்றி மோட்சம் தரும் குருவே    போற்றி ஓம்

86    ஓம்    எல்லா மகான்களும் என் ரூபமே என்பாய்    போற்றி ஓம்

87    ஓம்    அன்னதானமே பிறவி நோய் தீர்க்கும் மருந்தென்பாய்    போற்றி ஓம்

88    ஓம்    கூட்டு பிரத்தணையால் குலம் வாழவைப்பாய்    போற்றி ஓம்

89    ஓம்    உன்னை போற்றுவோரை உலகம் போற்ற வைத்தாய்     போற்றி ஓம்

90    ஓம்    இசையில் இணைந்து வருவாய்     போற்றி ஓம்

91    ஓம்    அன்ன வஸ்தரங்களை அளவின்றி கொடுப்பாய்    போற்றி ஓம்

92    ஓம்    கோதாவரி நதிதீர கோயில் கொண்டாய்     போற்றி ஓம்

93    ஓம்    பூட்டி மாளிகை அலங்கரிக்க முரளிதரனானாய்    போற்றி ஓம்

94    ஓம்    வியாழ பூஜையில் வல்வினை நீக்கும் வியாழமூர்த்தியே    போற்றி ஓம்

95    ஓம்    பரந்தாமா பரமேஸ்வரா பரமாச்சார்யா     போற்றி ஓம்

96    ஓம்    கண்கண்ட தெய்வமே கணபதியே     போற்றி ஓம்

97    ஓம்    பௌர்ணமி பூஜையில் பாவங்களை அழித்து நற்பலன் அருள்வாய்    போற்றி ஓம்

98    ஓம்    பாரிஜாத மலரே கற்பகத்தருவே காமதேனுவே     போற்றி ஓம்

99    ஓம்    நவகோள்களால் நன்மையும் நாவன்மையும் பெறவைப்பாய்    போற்றி ஓம்

100    ஓம்    தன்வினை நோய் தீர்க்கும் தன்வந்திரியே    போற்றி ஓம்

101    ஓம்    மீனாட்சி பக்தனை நீ ஆட்சி செய்தாய்    போற்றி ஓம்

102    ஓம்    நம்பினோரை கைவிடாத நாயகனே     போற்றி ஓம்

103    ஓம்    ராஜாராமா நாமமே தாரக மந்திரமென்பாய்     போற்றி ஓம்

104    ஓம்    அன்புக்கு அருள் நல்கும் அறிவே     போற்றி ஓம்

105    ஓம்    ராதா கிருஷ்ணா சீதாராமா லக்ஷ்மி நாராயணா    போற்றி ஓம்

106    ஓம்    ஸ்ரீநிவாசா ஸ்ரீவெங்கடேசா ஸ்ரீரங்கா     போற்றி ஓம்

107    ஓம்    சிவரூபா ஹரிஹரா சுப்ரமண்யா     போற்றி ஓம்

108    ஓம்    சகலமும் சத்குரு சாயிரூபமே     போற்றி ஓம்

External Links: Sai Baba Slogans in English: http://www.saisense.com/mantra-slogans/saibaba-namavali#comments]

No comments:

Post a Comment